சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?

சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?

249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம்.
தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன்,
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்,
ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம்.

அண்ணலாக வந்தவன் அறிந்து உரைத்த மந்திரம் ஓம் நமசிவாய.
அண்ணல் என்றால் அனைவரும் ஏற்றுக் கொண்ட , மதிப்பு கொடுக்கக் கூடியவர்தான்.
அப்படிப்பட்டவர் சிவன்.
தண்ணலாக வந்தவன் என்றால் , குமரிகண்டம் கடல் பொங்கி மூழ்கப் போவதை முன்பே அறிந்து அனைவரையும் , காவடியுடன் வழிநடத்தியவன் முருகன். அவரைத் தான் சகல புராணங் கற்றவன் என்று கூறுகிறார்.
கண்ணன் ஆக வந்தவன் பாரத யுத்தம் நடப்பதை அறிந்து இதில் நாம் வென்றாலும் , கலிகாலம் தொடங்கியதை முன் அறிந்து அதை நமக்கு உணர்த்தும் காரணத்துக்காக உதித்தவன் என்கிறார்.
இப்படி அம் மூவரும் ஒன்றுபடுவது எதில் என்றால் அந்த ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் தான் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *