நாட்கள் கணக்குப் படி 360 நாட்களுக்கு 365.25 திதிகளுக்கு அருகில் வரும்.
ஆகையால் நாட்களையே கணக்குகளாக்கி திதிகளை வைத்துக் கொண்டார்கள்.
சூரியன் நகராமல் இருந்தால் சூரியனைச் சுற்றிவர பூமி எடுக்கும் காலம் 360 நாட்கள் ஆகும்.
ஆனால் சூரியனும் நகர்வதால் பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 நாட்கள் ஆகிறது.
அதே போல் சூரியன் நகர்வதற்குக் காரணமான சக்தி மையமும் சுழன்று நகர்ந்து கொண்டு சிவத்தை நோக்கி செல்வதால் அதன் சுழற்சியும் கணக்கில் கொண்டார்கள்.
அந்த கணக்குப் படி தான் ஒரு வருசத்திற்கு 400 நாட்கள் வருகிறது.
இதை எப்படி அவதானித்தார்கள் என்றால் சூரியன் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் வலம் வருகிறது. அதை ராசி மண்டலமாக பிரித்து 12 ராசிகளாக்கினார்கள்.
இது போல் சகதிமையம் 29.64 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் செல்வதால் அதை நிலவின் ஓட்டத்தை அவதானிதது அதை நட்சத்திர மணடலமாக்கினார்கள். 27 நட்சத்திரங்களை உருவாகினார்கள்.
ராசி மண்டல நீள் வட்டத்துக்கும்
நட்சத்திர மண்டல நீள் வட்டத்துக்கும் வேறுபாடு இருப்பதை அவதானித்தார்கள்.
அது கருமையத்தின் சுழற்சியால் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்தார்கள்.
அந்த சகதி மையம் நகராமல் இருந்தால் சூரியன் சக்தி மையத்தை சுற்ற 21, 600 ஆண்டுகள் ஆகும் எனவும்.
கருமையமும் சூரிய சுற்றுக்கு எதிர் திசையில் நகர்வதால் சூரியன் கருமையத்தை வலம் வர 24,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
21, 600 ஆண்டுகள் என்றால் ஒரு ஆண்டிற்கு
21, 600/360 = 360 நாட்கள்
24,000 வருசங்கள் என்றால் 24,000/360 ஒரு ஆண்டிற்கு = 400 நாட்கள்.
360 நாட்கள் என்றால் ஒரு ஆண்டு எனவும்.
365.25 நாட்கள் என்றால் ஒரு வருசம் எனவும்.
24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியன் வானில் ஒரு திகிரி நகர எடுக்கும் காலம்.
360 நாட்களாக இருந்தால் 60 சுழல் ஆண்டுகளுக்கு
60 x 360 =21,600 நாட்கள்.
இதே கருமைய சூழற்சியால் 29.6 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் சூரியன் செல்வதால் 400 நாட்கள் என்றால்
400 x 60 = 24000 நாட்கள்.
இந்த 21, 600 நாட்கள் என்பது சூரியன் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் பூமி செல்வதால் நமக்குத் தெரியும் காலம்.
இந்த 24,000 நாட்கள் என்பது சூரிய சுற்று கரு மையத்தின் சுற்றால் நிகழ்வது.
இதே பூமி சூரிய நகர்வால் 360 நாட்களுக்கு ஒரு ஆண்டாக வானில் கடந்தால் ஒரு ராசியை கடக்க
30 x 60 x 360 =
6,48,000நாட்களாகும்.
இது 1800 ஆண்டுகளாகும்..
இதே 365.25 என கணக்கில் எடுத்தால்
365.25 x 60 x 30 =
6, 57, 450 நாட்கள் ஆகும்..
இதை ஆண்டுகளாக்கினால்
6, 57, 450/360 =
1826.25 ஆண்டுகளாகும்.
இதே நட்சத்திர மண்டலத்தில் சூரியன் நகர்வுக்கு ஒரு வருசத்துக்கு 400 நாட்களாக இருந்தால்
400 x 60 x 30 =
7, 20,000 நாட்கள்.
இதை ஆண்டுகள் ஆக்கினால்
7, 20,000/360 = 2,000 ஆண்டுகள்.
எனவே தான் ராசி நகர்வுக்கும் , நட்சத்திர நகர்வுக்கும் ஒரு பாத விலகல் இருக்கிறது.
நம் முன்னோர்கள் இதை எவ்வளவு காலம் அவதானித்து இருந்தால் இந்த கால கணக்குகளுக்கு வந்து இருப்பார்கள்.
அதனால் தான் வேறு எங்கும் இல்லாமல் தமிழ் நாட்டில் இவ்வளவு கோயில்கள் இருக்க காரணம்.
இவ்வளவு கோயில்களில் கொடிமரங்களில் சூரிய நகர்வு, சந்திர நகர்வுகளை அவதானித்து தரவுகள் எடுத்துத் தான் நாட்காட்டிகளும் பஞ்சாங்க கணக்குகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆகவே நாம் வருசத்திற்கு 365.25 என்ற கணக்கோடு 360 நாட்களையும், 400 நாட்களையும் கணக்கில் கொள்ளுமாறு நாட்காட்டிகள் வடிவமைக்க வேண்டும்.
ஆங்கிலேயர்களின் 72 சுழல் வருசங்கள் கணக்கு என்பதை வைத்துத் தான் வடிவமைத்த உள்ளார்கள்.
72 x 30 x 365.25 என்ற கணக்குகளில் அவர்கள் பயணிக்கிறார்கள்.
நம் காலம் தெரிந்த சித்தர்கள் அவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள் போல் தெரிகிறது.
அவர்கள் கணக்குப் படி 30 x 72 = 2160 வருசங்களாகிறது சூரியன் ஒரு ராசியை கடக்க .
இதைத்தான் அவர்கள் Stellerium – App-ல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அது தவறு.
பஞ்சாங்க கணக்குகளுக்கு ஒத்துப் போவதில்லை.
அதனால் தான் அதைக் கொண்டு கணிக்கப்படும் சாதகங்கள் பலன்கள் ஒத்துப் போவதில்லை.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments