248. அம்பலங்கள் சந்தியில், ஆடுகின்ற வம்பனே!
அன்பனுக்கு அன்பராய் நிற்பன் ஆதி வீரனே!
அன்பருக்குள் அன்பனாய் நின்ற ஆதி நாதனே !
உம்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே!
திருச்சிற்றம்பலம், என்றால் நம் சிரசில் உள்ள ஒரு சிறு வெளி நம் உள்ளம் இருக்கும் இடம். பேரம்பலம் என்றால் இந்த பால் வெளி.
இந்த அம்பலத்திற்கும் அந்த அம்பலத்திற்கும் சந்தியில் (சந்திக்கும் இடத்தில்) ஆடுகின்ற உள்ளத்தை வம்பன் என்கிறார்.
அன்பனுக்கு அன்பராய் அந்த உள்ளம் நிற்கும். அதாவது உள்ளம் சொல்வதை கேட்டு நடக்கும் ஒருவருக்கு அன்பராய் இருக்கும் ஆதி வீரன் (ஒளி) என்கிறார்.
இந்த அன்பருக்குள் அந்த நாதன் (Sound சத்தம் (அதிர்வு)) அன்பராய் நின்று கொண்டு இருக்கிறான்.
உம்பர் என்றால் உள்ளம் சொல்படி நடக்கும் தேவர்கள் (அவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம்) அந்த உம்பர்களுக்கு அவன் உண்மையாக நிற்கிறான் என்பது உண்மையே! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments