247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை,
மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை,
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்,
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே!
விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள சிவம் தான் உதித்தெழுந்த சோதி என்பது
மூன்று மண்டலங்கள் என்றால் சூரியனை பூமி வலம் வரும் 24 திகிரி சாய்ந்த 12 ராசிகள் கொண்ட மண்டலம் ஒன்று.
30 திகிரி சாய்ந்த நிலவு செல்லும் 27 நட்சத்திரங்கள் கொண்ட இரண்டாம் மண்டலம்.
நான்கு கரங்களாக சக்தி மையம் செல்லும், 20 வீடுகள் 18 படிகள் கொண்ட கொண்ட சக்தி மண்டலம் எனும் அக்னி மண்டலம் மூன்று, இப்படி மூன்று மண்டலங்களையும் இயக்கும் அந்த சிவம் ஆன மாயனை நீங்கள் இரவு வாண வீதியில் அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர்ந்து கொள்ள முயற்சி செய்தீர்கள் என்றால் என்னைப் போல் நீங்களும் காணும் கோயில்களில் அதையே வடித்து வைத்து இருப்பதை தெய்வம் என கையெடுத்துக் கும்பிட மாட்டீர்கள்.
Tags: சிவவாக்கியம்
No Comments