246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே!
ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்.
மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில்,
ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே!
நமசிவாய, மசிவாயந , சிவாயநம,
வாயநமசி ,
யநமசிவா, இப்படி ஓங்கி நாடியில் பாங்கு வாசிப்பது போல உச்சரிக்கும் பரமன் அஞ்செழுத்துலே.
மூங்கில் வெட்டி நார் உரித்து சிறு முறங்கள் செய்வது போல 5 எழுத்துக்களையும் மாற்றி மாற்றிப் போட்டு உச்சரிப்பது எப்படி அதன் உண்மை தன்மைகள் என்ன? என மறை நூல்களில் ஆய்ந்து சொல்லப்பட்டு உள்ளதை புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
இது வெறும் வார்த்தைகளோ, எழுத்துக்களோ? அல்ல.
அந்த எழுத்துக்களில் அறிவியலும், நம் வாழ்வியலும் முறம் போல பின்னிப் பினைக்கப்பட்டுள்ளது, என புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments