245. ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே
சோதி ! மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி !
ஆதி கூடி நெற் பரித்து அ காரமாகி ஆகமம்.
பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே!
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே என்றால் ஆதி கூடான சிவத்தை நோக்கி நாடி ஓடி . நாடி என்றால் சீராக விரும்பி என அர்த்தம்.
வெளிவந்த அந்த கூடு தேடி ஓடும் சூரியன் (சோதி). சூரியன் எங்கெல்லாம் செல்கிறதோ? அங்கெல்லாம் பூமியும் செல்லும். அந்த சோதியாகிய சூரியன் பூமியில் காலையில் கடலாகிய நீரில் மேல் எழும்பி மாலை கடலில் மறைந்து சுழன்று கொண்டே சிவத்தை நோக்கி திரும்பிக் கொண்டு உள்ளது என்பதை சொல்கிறார்.
மூலமான நாடி தூவெளி என்றால் தூய வெளி. அங்கே சொல் இறந்து
ம் என்ற அதிர்வுடன் கூடிய தூ ய வெளி.
இதே கருமுட்டை எனும் ஆதி கூட்டை பெண்களின் கருவறை நோக்கி அந்த ஆதியான ஒளி பொருந்திய வெப்பம், காற்று , சுக்கிலம் எனும் நீர் மூன்றும் கூடி கருமுட்டை தரித்து நெல் பயிராகி பரித்து அண்டமாகிய அ காரம் உடலாக ஆகம விதிகளுடன் பிறக்கிறது.
அந்த ஆதி மூன்றும் பேத பேதமாகி என்றால் , மூன்றும் கூடி பிறந்த உடல் வயதாகி பேத பேதமாகி சமநிலை அற்று இறந்து விடுகிறது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments