244. மூலமண்டலத்திலேயும் முச்சதுரம் ஆதியாய்,
நாலு வாசல் எம்பிராண் நடு உதித்த மந்திரம்.
கோலி எட்டு இதழுமாய், குளிர்ந்தழர்ந்த தீட்டமாய்,
மேலும் வேறு காண்கிலேன், விளைந்ததே சிவாயமே!
மூல மண்டலம் என்றால் இந்த பால் வெளி மலர்ந்த அந்த இடம். அந்த மூலமண்டலம் அதிர்வாய் சத்தமாய் மலர்ந்து காற்று, வெப்பம், நீர் என ஆதியாய் முச்சதுரங்களாக மாறுகிறது.
அந்த மூல மண்டலத்தின் அதிர்வுகள் நான்கு கரங்களாக வாசலாக விரிந்து , மீண்டும் சுருங்குகிறது. அந்த நான்கு கரங்களுக்கு நடுவே உதித்த மந்திரம் சிவம் எனும் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் நடுவில் சிவத்திலிருந்து உதித்ததுதான்.
வெளிவந்த பொருட்கள் அனைத்தும் எட்டு வடிவத்தில் சுழலும் கோலி குண்டுகளாய் (1/0 ) வெப்பமாய் வெளி வந்து குளிர்ந்து அலர்ந்து நிலங்களாய் (தீட்டமாய்) வெப்பம், நீர், காற்று இவற்றின் எச்சில் தான் நிலம். வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை சிவம் விளைந்து சிவாயம் ஆகியது.
ம் என்றால் அதிர்வு.
ம என்றால் நீர்.
சிவ நடனம் இதுதான்.
Tags: சிவவாக்கியம்
No Comments