ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்ற?

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்ற?

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்றிவர 24,000 ஆண்டுகள் ஆகும். 24,000 X 360 = 86 லட்சத்து 40 ஆயிரம் திதிகளில் சூரியன் 360 திகிரியில் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது.
இதை நம் தமிழ் முன்னோர்கள் 20 ஆயிரம் வருடங்களாக விண் வெளியில் சந்திரன், பூமி, சூரியன் நகர்வுகளை அவதானித்து அறிவித்துள்ளார்கள்.

பூமியின் தின நகர்வு வானில் ஒரு திகிரி தான். அது சூரியனை மையமாக வைத்துத் தான் சுழல்கிறது.
பூமி இந்த ஒரு திகிரி நகர்வில் 360 திகிரி நகர்ந்தால் ஒரு வட்டம் பூர்த்தி அடைய வேண்டும்.
சூரியன் ஒரே இடத்தில் நில்லாமல் அது பூமியின் எதிர்த்திசையில் ஒரு மையத்தை நடுவாக்கி அதுவும் சுழன்று கொண்டு இருக்கிறது.
இந்த சூரியன் எங்கெல்லாம் சுழன்று கொண்டு செல்கிறதோ அதைச் சுற்றும் பூமி உடன் சுழன்று கொண்டு பயணிக்கிறது.
பூமி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நிலா சுழன்று கொண்டு பூமியுடன் பயணிக்கிறது.
பூமியும் நிலாவும் ஒரே திசையில் பயணித்துக் கொண்டு உள்ளது.
சூரியனும் பூமியும் எதிர்த் திசையில் பயணிக்கிறது.
அதே போல் சூரியன் ஒரு மையத்தை சுற்றி சுழல்கிறது.
அந்த மையம் தான் கருமையம் என குறித்தார்கள் நம் முன்னோர்கள். அல்லது சக்தி மையம் என்றார்கள்.
அதைத்தான் நம் கோயில்களில் கருவறைகளாக்கி நம் குழந்தைகளுக்குப் கற்றலாக்கினார்கள்.
இந்த கரு மையம் என்பது 8 வகையான சக்திகளின் சராசரி கூட்டு மதிப்பாக இருக்கும்.
இந்த சக்திகள் எதுவும் கண்களுக்குத் தெரியாது.
உணர முடியும்.
அதனால் அதை கருமையம் என்றார்கள்.
அந்த கருமையம் சூரிய சுற்றுக்கு எதிர்த் திசையில் சுழன்று கொண்டே சிவத்தை நோக்கி பின்நோக்கி எங்கிருந்து மலர்ந்து வெளி வந்ததோ? அந்த சிவத்தை நோக்கி வீடு திரும்பிக் கொண்டுள்ளது. அதைத்தான் வீடு பேரு அடைதல் என கூறினார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *