243. பேய்கள் பேய்கள் என்கிறீர், பிதற்றுகின்ற பேயர்காள்!
பேய்கள் பூசை கொள்ளுமோ! பிடாரி பூசை கொள்ளுமோ!
ஆதி பூசை கொள்ளுமோ! அநாதி பூசை கொள்ளுமோ!
காயமான பேயலோ! கணக்கறிந்து கொண்டதே!
பேய்கள் பேய்கள் என்கிறீர் என்றால் , சில மனிதர்களின் உடலில் பேய் புகுந்து விட்டது என்பார்கள். இன்னும் சிலர் பேய்கள் உலாவுகின்றது என கூறுவார்கள் இப்படி பேய்கள் என்று கூறுகிறீர்களே , நீங்கள் தான் பேய்கள் என்று பேயர்காள் என்கிறார்.
பேய்கள் பூசையை ஏற்றுக கொள்கின்றனவா? இல்லை பேய் ஓட்டும் பிடாரிகள பூசைப் பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்களா?
அதே போல் ஆதி பூசை கொள்ளுமோ அநாதி பூசை கொள்ளுமே? என்றால் என்ன?
ஆதி என்றால் மூவர்.
காற்று, வெப்பம், நீர இவை மூன்றும் தான் ஆதி.
அநாதி என்றால் இந்த மூன்றும உருவாக காரணமான அநாதி அந்த அதிர்வு, நாதம் ஓசை இந்த பூசைகளை ஏற்றுக் கொள்ளாது.
இந்த காயமான பேய்கள் என்றால இந்த மனித உடம்பை கொண்ட பேய்கள் தான் கணக்குகளை அறிந்து கொண்டு
உயிர் உடல் என பிரித்து அறிந்து கொள்கின்றன.
உயிர் என்பது அந்த வெப்பம் (சி) உடலை விட்டு மறைந்து போவது தான் என புரிய வைக்கிறார்.
அந்த வெப்பம் இருக்கும் வரை இந்த உடல்கள் தான் பேய்களாக அலைகிறது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments