242. காயிலாத சோலையில் கனி புகுந்த வண்டுகால்.
ஈ இலாத தேனை உண்டு, ராப்பகல் உறங்குறீர்.
பாயிலாத கப்பல் ஏறி அக்கரைப் படும் உன்னை!
வாயினால் உரைப்பதாகும் ஓம் மௌன ஞானமே!
பழமரங்கள் நிறைந்து இருப்பது தான் சோலை. அந்த மாதிரி சோலையில் காய்கள் இல்லா விட்டால கனிகள் இருக்காது. கனிகள் இல்லாவிட்டால் வண்டு அங்கே இருக்காது. அது போல இந்த சடங்குகளின் உண்மை அறிவியல் உணராமல் இல்லாத வெறும் சடங்குகளைச் செய்தால் மட்டும் இந்த பிறவிக் கடலை நீந்தி கரையேர முடியாது என்கிறார்.
ஏதோ மந்திரங்களைக் படித்துக் கொண்டு அந்த உச்சரிப்பில் ஆண்மீகம் அடைந்து விட்டோம் என நினைப்பது, தேன் ஈ எடுக்காத தேன் போல இருக்கும் எதையோ உண்டு விட்டு , தேன் உண்டு விட்டோம் என்றும் இனி பிறவிப் பெருங்கடலை நீந்தி விடுவோம் என்று ராப்பகலாய் உறங்குறீர் என்கிறார்.
ஒரு கடலை கடக்க பாய்மரம் இல்லாத கப்பலில் ஏறி கடக்க முயலும் உன்னைப் போன்றவர்கள் தான் இந்த ஓம் எனும் மந்திரத்தை வாயினால் உரைப்பதும், மௌனமாக ஓம் உரைக்கும் ஞானமும். என்கிறார்.
ஓம் மற்றும் நமசிவாய எனும் எழுத்துக்களின் உண்மைகளை அறிந்து உணர்நது கொள்வதுதான் உண்மையான ஞானம்.
Tags: சிவவாக்கியம்
No Comments