241. வஞ்சகப் பிறவியை , மனத்துலே விரும்பியே !
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்!
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்.
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ளள் ஆகுமே!
நாம் இவ்வுலகில் பிறந்து இந்த உலக அனுபவத்தைப் பெற்று அது மிகவும் பிடித்துப் போய் மீண்டும் பிறக்க விரும்பி பிறந்து கொண்டு இருக்கிறோம்.
எங்கே இந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறிந்து கொண்டால் இந்த பிறவி எடுப்பது நின்று விடும் என்பதால் அந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறியாமல் இருக்கிறோம்.
ஆனால் இந்த வஞ்சகப் பிறவியை வதைத்து மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டுமானால் இந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறிந்து கொள்ளல் வேண்டும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments