239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே…
பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே…..
நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்….
பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே….
பட்டுச் சட்டைகளை இட்டு மணிமாலைகளை கழுத்தில் போட்டு , சாத்திரங்கள் ஓதும் சழக்கர்களே! சழக்கர் என்றால் கெட்ட எண்ணம் உள்ளவர்கள் என அர்த்தம். புத்தகங்களை அடுக்கி அதில் உள்ள உண்மைகளை மறைத்து வேதம் ஓதும் பொய்பரே!
உண்மையான நிட்டை என்றால் என்ன ஞானம் எது ? நிட்டை என்றால் அந்த சாதாரண மூச்சு 4 நொடி அதை அறிவீரோ? சரம் என்றால் மூச்சு.
மிகினும் குறையினும் நோய் செய்யும்.
பட்டை ஏது? நெற்றியில் அணியும் பட்டையின் அர்த்தம் நிலநடுக்கோடு, கடகரேகை, மகரரேகை என நம்முன்னோர்கள் நன்கு பூமியை அறிந்து இருந்தார்கள் என்பதன் பொருள்.
அதை மறைத்த பாதகக் கபடரே! என வசை பாடுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments