எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ? அப்படி பூமியின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் தான்.
ஆனால் சூரியனின் எதிர்புற நகர்வினால் சூரிய ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு இப்பொழுது 365.25 நாட்கள். அது நாம் கோயில் கொடிமரங்களை கவனித்து மாற்றிக் கொண்டு இருக்கும் வரை அது 365.18 நாட்கள் தான்.
ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நாம் ஒரு நாளை கூட்டுவோம்.
ஆனால் இவர்கள் கட்டுப்பாட்டில் காலண்டர்கள் இப்போது . அவர்கள் 365.25 நாட்கள் ஒரு வருடத்திற்கு என்று கூறி நான்கு வருடங்களுக்கு ஒரு நாளை கூட்டி Feb – 29 என்கிறார்கள். இது லீப் வருடம். Feb – ல் 29 நாட்கள்.
ஆனால் நம் தமிழ் முறைப்படி 6 வருடங்களுக்கு ஒரு முறைதான் லீப் வருடம் வரும்.
அதைத்தான் சூரியனுக்கு 6 வருடம் தசாபுத்தியாக வைத்து உள்ளார்கள்.

60 சுழல் ஆண்டுகள் கணக்கு பூமி சுற்றின் 360 நாட்களை கொண்ட கணக்கு தான்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பெயர்களை கொண்டு 60 ஆண்டுகளுக்கு பெயர் வைத்து இருந்தார்கள். அந்த ஆண்டுகளின் கணக்கு ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள் தான்.
இந்த 60 ஆண்டுகளைத்தான் ஒரு கரணம் என அழைத்தார்கள்.
ஒரு கரணமான 60 ஆண்டுகளை 27 யோகங்களாக வகுத்தார்கள். 60 ஆண்டு / 27 = 2.222 ஆண்டு.
ஒவ்வொரு 2.22 ஆண்டுக்கு ஒரு யோகம். அதாவது 800 நாட்களுக்கு ஒரு யோகம்.

நிலவும் பூமியும் ஒரே திசையில் சுற்றுவதால் வருடத்தில் நிலவுக்கு 6 நாட்கள் இழப்பு.
பூமியும் சூரியனும் எதிர் திசையில் சுற்றுவதால் 5.18 நாட்கள் அதிகமாகிறது.
ஆகையால் இழப்பை சரிபடுத்தினால் 360 நாட்கள் என்பது வருடத்திற்கு என்றால் 60 சுழல் ஆண்டு கணக்கு சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு சரியாக பொருந்தும்.
அதை ஒரு கரணமாக்கினார்கள்.
30 கரணங்கள் செல்லும் போது சூரியன் 30 திகிரி நகர்ந்து இருக்கும். ஆனால் நட்சத்திர கணக்கில் ஒரு பாதத்தை இழந்து வானில் 2 நல்சித்திரங்களை நகர்த்தி 1800 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசிகளை சரி படுத்திக் கொண்டார்கள். 1800 ஆண்டுகள் என்பது பூமி சுற்றின் வருடத்திற்கு 360 நாட்களைக் கொண்ட கணக்கு தான்.
3600 ஆண்டுகளுக்கு முன்பு ராசிகள் உருவாக்கப்பட்டு பஞ்சாங்க கணக்குகள் திருமாலால் கொடுக்கப் பட்டது.
அதில் இருந்த கரணம் யோகம் என்ற கணக்குகள் புரியாமல் இன்றைய ஆட்சியாளர்கள் தவிர்த்து விட்டார்கள்.
ஆகையால் நம் முன்னோர்கள் நிலவின் ஓட்டம், பூமியின் ஓட்டம், சூரியனின் எதிர்த்திசை நகர்வு என அனைத்தையும் நன்கு தெரிந்து தான் பஞ்சாங்க கணக்குகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
இது யாரையும் குழப்புவதற்காக அல்ல தெளிவு படுத்த

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *