சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே,
உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல்,
குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும்,
பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே!

மருள் என்றால் இறைவனின் அருளுக்கு எதிர்ப்பதம். நாமாக மனத்தால் எதையாவது நினைத்துக் கொண்டு அதை உண்மை என நம்பி அவசரக் குடுக்கைகள் போல அடுத்தவர்களை அடிமைப் படுத்தி அதிகாரம் எனும் புகழுக்கு மயங்குகின்ற மாந்தரே அவை நிலையற்றவை.
இறைவன் அருளும் உண்மையான வாழ்வியலும் , இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கிடைக்கும் ஆனந்தத்துடன் இருப்பதும் தான் அருளுடன் வாழ்வது என அர்த்தம் என்கிறார்.
குகன் என்றால் முருகன என்பது அனைவரும் அறிந்ததே.
முருகன் சூரியனின் ஓட்டத்தை நன்கு அறிந்து சூரியனின் ஓட்டத்தில் ஏற்படும் சக்தி மாற்றத்தால் பூமியில் ஏற்படும் ஊழியை முன்னரே அறிந்து 12,600 வருடங்களுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் இருந்து பெரும்பாலான மக்களையும் காவடியுடன், கால்நடைகளுடன் பாதுகாப்பாக இலங்கை வரை கொண்டு சேர்த்தவர்.
சக்திமைய பின் சுழற்சியால் சூரியனின் பாதை சுருள் வடிவில் செல்லும் போது சக்தி மாற்றத்தால் பூமியின் உள்புறம் இருக்கும் உலோக குண்டின் காந்தப்புலம் மாறுவதால் ஊழி உருவாகும் என முன் அறிந்து வாண் பகையை புரிந்து அதை வெற்றி கொண்டவர். பின் இலங்கை வந்து தண்டு இறங்கியவுடன் பங்குனி உத்திரத்தில் மலை மக்களுடன் வேலெறிந்து வாண் பகையை வென்றவர்.
அறம் சார்ந்த வாழ்வியலை வடித்தவர்.
அதில் குரு எனும் வியாழன் கோள் ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்குள் தொண்டரான பூமி 12 முறை சூரியனை சுற்றி வருவதை அறிந்து , மனிதனின் பருவங்களை 7 ஆக பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் 12 வருடங்கள் என பிரித்தார்.
அதில் முதல் பருவமான பிள்ளை பருவம் 12 ஆண்டுகளில் அவர்கள் இந்த உலகை நன்கு புரிந்து கொள்ள பருத்தி ஆடையாவதற்குள் 12 முறை வடிவம் மாறி அடிபட்டு பாடுபட்டு அது துணியாக மாறுகிறது. அது போல குருவிடம் அடிமையான தொண்டரும் 12 வருடங்கள் குருவுக்காக உழைத்து பாடுபட்டு அந்த ஓம் எனும் உருக்கொடுத்த மந்திரத்தை அறிந்து கொள்வார்கள்.
அந்த ஓம் எனும் மந்திரத்தை அறிந்து அதன் உண்மை தத்துவத்தை வாழ்வியலுடன் அறிந்து அதை கொண்டு வாழ்வியலை நீந்த கற்றுக் கொண்டால் வாழ்க்கை ஆனந்தமாக நிம்மதியாக எளிமையாக நன்றாக இருக்கும் என்கிறார். குகனொடு இந்த பிள்ளையும் அந்த பருவத்தை சரியாக கடந்தால் தான் அந்த குழந்தை மற்ற பருவங்களை எளிதாக கடந்து விடும் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *