233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே!
தேரிலே வடத்தை இட்டு , செம்பை வைத்து இழுக்கிறீர்.
யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை,
கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!…
ஊரில் உள்ள மக்கள் கோயிலில் கூடி ஒரு மனதாய் தேர் இழுக்க முடிவு செய்து வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதில் இறைவன் என ஒரு செம்பினால் செய்த சிலையை வைத்து தேரை இழுக்கிறார்கள்.
இந்த உலகில் உள்ள யாரினாலும் அரிய முடியாத ஆதிநாத சித்தரை என்றால் ஆதியாக தோன்றிய நாத மாக அதிர்வாக உள்ள இறைவனை மனிதர்கள் அறிய முடியாது.
கோதில் என்றால் குற்றமற்ற என்று பொருள். கோதிலாத மனிதர்கள் என்றால் குற்றமுள்ள மனிதர்கள் இறைவனின் முன்னாள் நான் பெரியவன், எனக்குத் தான் முதல் மரியாதை என பன்னும் புரளி பாரும் உலகெங்கும்மே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments