சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது. இப்பொழுது உள்ள திருத்தப்படாத பஞ்சாங்கத்தில் அது 24.11 என்று இருக்கும்.
இதை சமநாளில் வான் பார்த்தால் தெளிவாக புரியும்.
ஒவ்வொரு நாளும் கொடி மரத்தில் மேசராசி கொடிமரத்தில் எழும் போதும் இதை உறுதி செய்யலாம். மேசராசி கொடி மரத்தில் இருந்து இரண்டாவது ராசியாக கொடி மரத்தில் இருந்து வடக்கில் இருக்கும்.
அதனால் சித்திரை -1 ஐ 2020 – march – 21 -ல் சமநாள் வந்த போது மாற்ற வேண்டும்.
சித்தரியல் நாட்காட்டிப்படி அப்படித் தான் மாற்றி இருக்கிறோம். இல்லாவிட்டால் பருவங்கள் ஒரு மாதம் முன்னாள் சென்று விடும். சித்தரியல் நாட்காட்டி
எப்பொழுதும் பருவங்களுக்காக சமநாளிலேயே நாட்கட்டி இருக்க விட்டிருக்கலாம். ஆனால் நம் முன்னோர்கள் சூரியனின் ஓட்டத்தினால், சூரியன் எந்த ராசியில் இப்பொழுது இருக்கிறது. என அறிந்து கொள்ள 60 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாளை சமநாளிலிருந்து மாற்றி அனைவரும் சூரியன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளச் செய்தார்கள்.
சூரியன் மேசத்தில் இருந்த வரை பௌர்ணமி தையில் பூச நட்சத்திரத்தில் அல்லது பக்கத்து நட்சத்திரத்தில் நிலா செல்லும். ஆனால் இப்பொழுது சூரியன் மீனத்தில் இருப்பதால் இனிமேல் சித்திரை march – 21-ல் சமநாளில் ஆரம்பித்ததால். மாசி மாதத்தில் தான் பௌர்ணமி பூச நட்சத்திரத்தின் அருகில் வரும். தை மாதத்தில் திருவாதிரையில் தான் இனிமேல் வரும்.
இதை சரி செய்யாவிட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுவர்.
மற்றும் பெரும் பாலோருக்கு சாதகப் பலன்கள் பொருந்தாது.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments