231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால்,
வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே!
தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன்,
என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே!
கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் இறைவன், கருங்கடல் என்றால் எட்டு வகையான சக்திகள். சக்திகள் தான் அனுக்களாக பொருட்களாக ஒன்றி இருந்தது வெடித்து சத்தத்தால் பொருட்களாக மாறி மீண்டும் சக்திகளாக மாறுவதைத் தான் கருங்கடல் கடைந்தமால் என்கிறார். மால் என்றால் பொருட்கள் என அர்த்தம். இதையெல்லாம் அறிந்து சொன்னவர் நம் திருமால்.
வின்னிலே இருப்பவன் இறைவன் அவன் மேனி தான் எங்கும் பரந்து விரிந்து கண்ணுக்குத் தெரிகிறது. தெரியாமல் இருக்கும் அதிர்வுகளாகவும். மற்ற உயிரினங்களின் உள்ளும் இறைவன் இருப்பனே, தராதரம் என்றால் மலை எனும் தராதரம் படைத்தவன், அனைத்து உயிரினங்களிலும் உள்ளான் என்கிறார். என்னுள்ளும் இருப்பனே, எங்கும் ஆகி நிற்பனே அந்த இறைவன் என்கிறார். இறைவன் தான் எங்கும் எதிலும், கானும், உணர்ந்தும், உணர்த்தும, அனைத்தும்.
Tags: சிவவாக்கியம்
No Comments