230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்,
மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும்,
துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும்,
பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே!
பதி, பசு, பாசம் எனும் மூன்று பொருள்கள் தான் இவ்வுலகில் உள்ளன. அதில் பதி என்பது இறைவன். பசு என்றால் உயிர்கள், பாசம் என்றால் மற்ற உயிர்களும், அனைத்துப் பொருட்களும் பாசம் எனப்படும்.
உயிர் இறைவனிடம் நாடாமல் பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு அதை முழுமையாக அடைய முடியாமல் இன்னும் , இன்னும் என பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என சோர்வுற்று இறைவனை நாடி பிறந்திடாமல் இருப்பதும், பிறந்து இந்த பிறவிகளை எதற்காக எடுக்கிறோம் என மறப்பது, மீண்டும் நினைப்பது, மறந்ததை தெளிந்ததும்,
பின் இந்த பாசம் எனும் சக உயிரினங்களையும், பொருட்களையும், துறப்பதும், மீண்டும் மனம் கேட்காமல் தொடுப்பதும், ஐந்து புலன்களினால் சுகித்து வாரி உண்பதும் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து தெளிந்ததும் வீடு பேறு அடைந்து பிறந்திடாமல் இந்த உயிர் அடங்கும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments