229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன்.
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன்.
உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்,
பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!.
நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக நாதமாக அருவமாக இருந்த போது உன்னை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்பா அம்மாவுக்கு மகனாக உருவாக உடலாக உருவமாய் இருந்த போதுதான் உன்னை என்னால் முழமையாக உணர முடிந்தது. இந்த உருவத்தால் இந்த உலகினை , இறைவனை ஐந்து வகையான ஞானேந்திரியங்கள் வழியாக அறிந்த அறிவுதான் (ஞானம் தான்) நான் பருவம் அடைந்து நான் அடுத்த உயிரைப் படைக்க பருவம் அடைந்த போதுதான் பரப்பிரம்மம் அதாவது அந்த அறிவு எனும் ஒளிதான் விதையாக விதைப் பைக்குள் பரப் பிரம்மமாக ஆனது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments