227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர்
எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் .
பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே.
பண்ணி வைத்த கல்லையும் என்றால் , கொடிமரம் நட்டு அதன் சமநாள் நிழலின் கோட்டில் அடையாளமிட்டு ஒரு மேடை கட்டி அதில் ஒரு கல்லை நட்டு வைத்து அடையாளப் படுத்தி அந்த மேடையில் அமர்ந்து கொடி மரத்தின் வழியாக வான் கவனித்து, அதில் ராசிகள், நல்சித்திரங்கள், சூரியன் , சந்திரன் மற்றும் கோள்களின் நகர்வை கவனித்தார்கள். அந்த வளமையை நாம் மறந்து விடுவோம், என்று சிவவாக்கியர் எண்ணி இருக்க மாட்டார். அப்படி அடையாளத்திற்காக நட்ட கல்லை அநாதியான இறைவன் என்று எண்ணமுற்று நீர் என்ன என்ன பேர் எல்லாம் வைக்கிறீர்கள் ஏழைகாள் என்கிறார்.
இந்த அண்டத்தில் உள்ள அனைத்தையும், பண்ணவும், படைக்கவும், படைத்து வைத்து அழிக்கவும் , சிவம், சக்தி எனும் இரண்டும் ஒன்னுமாகி என்றால், சத்தமும், பொருட்களும், நாதத்தில் இருந்து பிறந்து சத்தம் சக்திகளாகிறது. சிவம் பொருள்களாகிறது. பின் இரண்டும் ஒடுங்கி அதிர்வுகளாகி (நாதம்) information ஆக நாதம் ஆகி விடும். மீண்டும் பெரு மலர்வில் மலர்ந்து அண்டமாகி சத்தம், பொருட்களாக, சிவமும், சக்தியாக மாறும். இப்படித்தான் பிண்டத்திலும், விதை, கருமுட்டை என உருவாகி, உடலாகி நெஞ்சில் நாதமாக இதயமாக, அன்பாக லப்டப் எனும் நாத லயமாக நம்மை உண்டு கொண்டு உள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments