225. அண்டம் ஏழும் உழலவே, அனந்த யோனி உழலவே’
பண்டை மால் அயனுடன் பரந்து நின்று உழலவே,
எண் திசை கடந்து நின்று இருண்ட சக்தி உழலவே ,
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே:
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது என நம் தமிழ் முன்னோர்கள் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். அவற்றிற்கு ஏழு கோள்களின் குணங்களைப் பொருத்தி வகைப் படுத்தினார்கள்.
1. பரந்த வெளிக்கு( ஆக்கு நெய்) வியாழனையும்.(வெள்ளை)
2. காற்றுக்கு (விசுத்தி) புதனையும், (மஞ்சள்)
3. வெப்பத்துக்கு (அனல் காத்த சக்கரம்) செவ்வாயும், (சிவப்பு)
4. நீருக்கு (சு(சுக்கிலம், சுரோணிதம்) வதி தானம்) நிலாவையும் , (நீலம்)
5.நிலம் (வெள்ளி) மணி(time)ப்பூரகம் (பச்சை),
6. மூலாதாரம் (சனி) (கருப்பு)
7. ஆகாச ஆரம் (சூரியன்) (நீர்வண்ணம்)
இப்படி அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள ஏழம் உழன்று கொண்டு இருக்கிறது என்கிறார்.அனந்தம் என்றால் என்னிலடங்கா யோனி வழியாக பிறந்த உயிரினங்கள் இந்த உலகில் உழன்று கொண்டு உள்ளது.
பண்டை மால் அயனுடன் என்றால் திருமாலும், முருகனும், நமக்கு இந்த பரந்த பால்வெளி இயங்கும் தத்துவங்களைத் தந்து உள்ளார்கள். அந்த பரந்த பால்வெளி உழன்றுகொண்டு உள்ளது என்கிறார். எட்டு திசைகளிலும் , எட்டு கண்ணுக்குத் தெரியாத இருண்ட ‘சக்திகள் 1.. சத்தம் (Sound) 2. வெளிச்சம் (Light) 3. வெப்பம் (heat) 4. நீர்மம் (hydro) 5. புவி ஈர்ப்பு விசையால் உண்டான உராய்வு விசை (Kinetic) சக்தி, 6. ஈர்ப்பு விசை (magnetic) சகதி
? மின்சார சக்தி (electrical. )
8. அணுசக்தி (Atomic)
இப்படி அட்டமா சக்திகள் உழலவே.
அண்டத்தில் எங்கும் ஒன்றி இருக்கும் சத்தம் எனும் அதிர்வு எனும் ஆதி நடனம் ஆடிக் கொண்டு உள்ளது என்கிறார். அது தான் சிவதாண்டவம்.
Tags: சிவவாக்கியம்
No Comments