223. விழித்த கண் குவித்த போது, அடைந்த ஓர் எழுத்தெலாம் ,
விளைந்து விட்ட இந்திரசால வீடதான வெளியிலே,
அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே!
விழித்த கண் குவித்த போது என்றால் நாம் தியானத்தில் அமர்ந்து கண் விழித்த நிலையில் குவித்து மேல் நோக்கி நம் புருவ மத்தியை கவனிக்கச் சொல்வார்கள். நம் புருவ மத்திதான் சுழிமுனை – நம் தலையில் மூன்று சுரப்பிகள் உண்டு. Peniyal , pituitari. HypoThalamous . தமிழில் ஆனந்த சுரப்பி, இதம், பின் கலம் என சுரப்பிகளைக் குறித்த எழுத்து ய . அந்த ஆனந்த சுரப்பி உள்ள இடத்தை கண்குவித்து மேல் நோக்கி பார்க்கும் போது ஞான இந்திரியங்கள் ஐந்தையும். கர்ம இந்திரியங்கள் ஐந்தையும் அறிந்து புரிந்துணர்வுடன் , மூச்சுக்காற்றை மெதுவாக அழுத்தினால் அது புருவமத்திக்குச் சென்று மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் நான் என்ற அகங்காரம் அற்றுப் போய் இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்து , நாம் அனைவரும் தனித்தனி இல்லை , யாருமில்லையானதே!
Tags: சிவவாக்கியம்
No Comments