222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய்.
துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய்.
அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே !
ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே.
சொல்லு நாடி ஊடு போய் என்றால் நமக்கு மட்டும் புரிவது மத்திமை .
மொழியால் அடுத்தவருக்க புரிய வைப்பது பைசந்தி . யாவருக்கும் பொதுவானது வைகரி, சூக்குமை வைகரி, தூலவைகரி என சொல்லு மூல நாடி ஊடு போய் இந்த சொல்லு மூல நாடி ஊடு போய் என்றால் சிவம் எனும் நாதத்தின் காதில் கேட்கும் 4 K Hz to 20kHz freq பேசுவது தூல வைகரி. காதிலே கேட்காமல் நமக்கு மட்டும் கேட்கும் மூல நாடி ஊடு போய் அழுத்தமான அக்கரம் என்றால் pressure மிகுந்த காற்றின் உதவியால் வெப்பத்தை (அங்கியை ) எழுப்பி 6 சக்கரங்களையும் கடந்து நம் தலையின் அப்புறத்து வெளியில் இருக்கும் வெளியில் சகசராரத்தை அடைந்து இவ் அண்டத்தை புரிந்து கொள்ளுவது.
இப்படி சிவத்தின் (இறைவனின்) உதவியால் வரும் வாக்கை நாம் தேவையில்லாமல் விரையம் செய்யாமல் நல்லவற்றிற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். அதைத்தான் நம் முன்னோர்கள் சரியாக இறைவனைப் பற்றிய செய்யுள்களாக பாடி வைத்தார்கள். மனிதனைப் பற்றிப் பாடுவதை ஊக்கப்படுத்தவில்லை.
ஒரு வார்த்தையை சொல்ல நம் மூலையில் யோசித்து அதை சொல்ல யத்தனிக்கும் போது அடி வயிற்றுக்குள்ளிருந்து காற்று புறப்பட்டு வயிற்றில் சுழித்து நெஞ்சில் அழுத்தம் ஏற்பட்டு தொண்டையில் காற்று உரசி நாக்கில் பல்லில் உதட்டில் தடைகளை ஏற்படுத்தி மொழியாக உருவாவது சொல் (வார்த்தை).
Tags: சிவவாக்கியம்
No Comments