221. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே
வானம் எனும் வெளி இல்லா விட்டால் எந்த பொருளும் இருக்காது, வானுமே இருக்க முடியாது.
ஊன் என்றால், உணவு, உடம்பு என்று பொருள்படும். இந்த உடம்பு ஊன் இல்லாவிட்டால் உயிருடன் இருக்காது. இந்த உடம்பு இல்லாவிட்டால் இந்த அடைத்தையும் எதையும் அறிய முடியாது.
நான் என்ற ஒன்று இருந்தால் தான் இந்த உலகம், பரம் எல்லாம். நான் இல்லாவிட்டால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. நான் என்பது ஒரு ஆரம்ப புள்ளி. என்னில் இருந்து Ref – ஆக அனைத்தையும் விளங்கிக் கொள்ள முடியும். நான் இல்லாவிட்டால் நானுமில்லை நன்னிடில்.
அதே போல் தான் என்றால் இறைவன். இந்த இறைவன் அனைத்திலும் இருப்பவன். அதை அறியாத நான் , இறைவன் நம்முள் இருப்பதை அறியாமல் தயங்கி ஆடிக் கொண்டு இருக்கிறோம். அவன் நம்முடன், நம்முள்ளே இருப்பதை உணர்வுப் பூர்வமாக அறிவதுதான் வீடு பேறு அடைதல் என்கிறோம். அவன் இருப்பதை அறிந்து விட்டால் இயக்கமே தேவையற்றதாகி விடும்.
இல்லாவிட்டால் அனைத்தும் நம்முடையது என்ற ஆர்வகோளாரில் அலைந்து தயங்கி ஆடும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments