தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

கத கத – கதகதப்பு, சூடு,
கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு
கரகர – காய்ந்து இருத்தல்
கம கம – மணம் வீசுதல்
கண கண – உடம்புச் சூடு
கசகச – வியர்த்தல்
கலகல – சிரிப்பு
கதகத – கொதித்தல்
கபகப – பசியெடுத்தல்
கடுகடு – கோபமாக பேசுதல்
கரகர – தொண்டை வறட்சி
கரகரு – கருப்பு
கறகற – தொந்தரவு
கலீர் கலீர் – சலங்கையொலி
கணீர் கணீர் – மணி ஒலி.

கிணு கிணு – மெல்ல இரைதல்
கிறுகிறு – விரைவாக /சுற்றுதல்
கிளு கிளு – சிரித்தல் / மகிழ்ச்சி
கிடுகிடு – விரைவாக /அச்சம்
கிசுகிசு – இரகசிய பேச்சு.
கிச்சுகிச்சு – நகைச்சுவை
கீச்சுகீச்சு – ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
கீர்கீர் – ஒலிக்குறிப்பு (கத்துதல்)
குடுகுடு – விரைந்தோடித் திரிதல், நடத்தல்
குளுகுளு – தென்றல் காற்று / குளிர்
குபீர் குபீர் – குருதி பாாய்தல்
குறு குறு – மனம் உறுத்துதல்
குசுகுசு – ரகசியம் பேசுதல்
குமுகுமு – மிக மணத்தல்
குபுகுபு – புகை கிளம்புதல்
கொழு கொழு – பருத்தல்

சட சட – ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
சடார் சடார் – பொருட்கள் மோதுதல்/விழுதல்
சரசர – ஒலித்தல் ,உரசல் ஒலி
சலசல – ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
சளசள – ஓயாத இரைச்சல் பேச்சு
சிலீர் சிலீர் – குளிர்தல்
சிடுசிடு – எரிச்சல் கலந்த கோபம்
சுள்சுள் – வலித்தல்
சுறு சுறு – கோபம்

டாங்டாங் – ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
தடதட – நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
தரதர – தரையில் உராயும் வகையில் இழுத்தல்
தளதள – இளக்கம், சோபை
தழுதழு – நாத்தடுமாறுதல்
தகதக – ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
திருதிரு – அச்சம் ,முழித்தல்
திடு திடு – விரைவான ஓட்டம்
துடு துடு – ஒலிக்குறிப்பு
துருதுரு – சுறுசுறுப்பு
துடி துடி – இரங்குதல் ,வலியால் அவதியுறல்
தொளதொள – இறுக்கமின்மை
தொண தொண – இடைவிடாது பேசுதல்

தமநம – தொண்டைக் கமறல்
நறு நறு – கோபம்
நற நற – பல்லைக் கடித்தல்
நெருநெரு – உறுத்தல்
நெடுநெடு – உயரக் குறிப்பு
நைநை – தொந்தரவு
நொளுநொளு – குழைவு

பள பள – மினுங்குதல்
பரபர – நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
பகபக – வேக குறிப்பு
பளிச் பளிச் – மின்னுதல்
படபட – இதயத்துடிப்பு
பளார் பளார் – கன்னத்தில் அறைதல்
பளீர் பளீர் – மின்னல்
பிசுபிசு – பசைத்தன்மை
புறு புறு – முணுமுணுத்தல்
பொசுபொசு – திரட்சிக் குறிப்பு
பொல பொல – கண்ணீர் வடிதல்
பொலுபொலு – உதிர்தல்

மடமட – வேகமாக நீர் குடித்தல்
மளமள – முறிதல்
மங்குமங்கு – தொடர்வேலை.
மினுமினு – பிரகாசித்தல், மிளிர்தல்
மெது மெது – மென்மை
மொழு மொழு – வளர்ச்சி
மொறமொற – மிகக் காய்தல்
மொர மொர – கடித்தல்

வழவழ – உறுதியின்மை
வளவள – பயனின்றி பேசுதல்
வளுவளு – நொளு நொளுத்தல்
விதிர்விதிர் – அச்சம்
விசுக் விசுக் – வேகநடை
விண் விண் – வலித்தல்
விடுவிடு – வேகமாக
விறுவிறு – வேகமாக, பரபரப்புடன்
வெடுவெடு – கோபமான பேச்சு்
வெதுவெது – இளஞ்சூடு
வெலவெல – நடுங்குதல், பதறுதல்.

*இரட்டை கிளவி சொற்களையும் அதன் பொருளையும்* *புரிந்து கொண்டால்…*
*தமிழ் மொழியே ஒரு கவிதைதானே!

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *