சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்

சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்

219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ?
செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும்.
சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே?

நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் அனைத்தும் பொருள் குறித்தனவே. உயிர் எழுத்துக்கள் 12 – ல் முதல் ஐந்து எழுத்துக்கள் சிவ பதங்கள்.
நாதம் – அ
விந்து – ஆ
சதாசிவம் – இ
ஈஸ்வரம் – ஈ
சுத்த வித்தை எனும் விதை – உ
ஊ ஒள என்பதில் உள்ள கொம்புக்கால்
என்பது மாயை அசுத்த மாயையும் குறிப்பன.
ஒள எனும் எழுத்து அசுத்த மாயையாகிய கருமுட்டையை குறித்து உருவாக்கப்பட்ட எழுத்து.
ஒள எனும் கருமுட்டையில் உவ்வு வந்து தரித்து அகாரம் எனும் உயிர் சனித்ததோ? என்று கேள்வி கேட்கிறார்.
மவ்வெழுத்து என்றால் நீர் அதாவது விந்து சுரோணிதம் எனும் மனிதர்கள் மயங்கும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்று உயிர் உள்ள உடல்களாக மாறுவதற்கு காரணமாகின்றன.
இந்த ஒள எனும் கருமுட்டை செவ்வை ஒத்து நின்றலோ என்றால் சிவப்பு நிறம் கொண்டதாக உள்ளது. இதைத்தான் நம் கோயில்களில் சிவப்பு வெள்ளை நிறங்களில் வர்ணம் அடித்து உருவகப் படுத்தி இருப்பார்கள். அந்த உ எனும் விதை மூன்று வளையமாக பாம்பு வடிவில் சுருண்டு சுணங்கி இருப்பது போல விநாயகர் கோயில்களில் வடித்து இருப்பார்கள்.
சிவபதங்களான முதல் ஐந்து தத்துவங்களும் அந்த கருமுட்டையில் தைத்து நின்று வளர ஆரம்பித்தாலும் அது செவ்வை ஒத்து நின்றலோ என்று கூறுகிறார்.
இதை சிவ்வை ஒத்த ஞானிகள் என்றால் சி எனும் எழுத்து அறிவை குறித்து வெப்பத்தைக் குறிப்பது. அறிவு நிறைந்த ஞானிகாள் இந்த எழுத்துக்களை குறித்து விரித்துரைக்க வேணுமே! என்கிறார்.
ஒள எனும் எழுத்தில் உள்ள ஒளவையார் என்பது அனைத்துப் பெண்களையும் ஒளவையாராக நாம் வணங்கி அவர்களை போற்றி பாதுகாத்த சமுகம் நம் தமிழ்ச் சமூகம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *