சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே

சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே

218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்,
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்.
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்.
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!.

அகார காரணத்திலே அனேக அனேக ரூபமாய் என்றால் அ எனும் தமிழ் எழுத்தே அண்ட மலர்வின் தன்மையை விளக்கும் எழுத்து தான். எண்ணிலடங்காத உயிர்களாக ரூபம் எடுத்து இந்த உலகில் பிறக்க இந்த அகாரம் தான் காரணம் என்கிறார். அதில் இந்த உடல் எனும் உகாரத்தால் உருவம் என்ன என்று உருத்தரித்து நின்றனன். இந்த உடலின் உருவம் என்ன? என்பதற்கு உகாரம் தான் காரணம் என்கிறார்.
மகார காரணத்தால் மயங்குகின்ற வையகம். என்றால் இந்த உடலை உருவாக்க ஆணும் பெண்ணும் மயங்கி இயங்குவதற்கு மகாரம் எனும் ஆணுக்கு விந்துவாகவும், பெண்ணுக்கு சுரோணிதமாகவும் சுரக்கும் நீரில் தான் மயங்கி இந்த உடல்கள் உருவாகின்றன என்கிறார்.
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே என்றால் சி என்றால் வெப்பம். சிகார காரணம் என்றால் அந்த வெப்பத்தால் தான் அறிவு கிடைக்கிறது. அந்த அறிவால் காரண காரியங்கள் தெளிந்ததே சிவாயமே என்கிறார். சிவாயம் என்றால் சி-வெப்பம்.
வா – காற்று
ய- வெளி
ம் – என்றால் நீர்
நான்கும் சேர்ந்தால் ?……

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *