217, வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் .
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்.
முந்து மந்திரத்திலோ? மூலமந்திரத்திலோ?
எந்த மந்திரத்திலோ ? ஈசன் வந்து இயங்குமே!
வெந்த நீறு என்றால் சாம்பல் (திருநீறு).
மெய் என்றால் உடல். திருநீற்றை உடலெங்கும் பூசி வேடமும் தரிக்கிறீர் என்று போலி சிவ பக்தர்களைத்தான் எள்ளி நகையாடுகிறார். உண்மையான சிவ பக்தர் என்றால் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன என்று சொல்ல சொல்கிறார்.
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கு மந்திரம் ஓம் நமசிவாய எனும் மந்திரம். அதில் முந்து மந்திரத்திலோ ? என்றால் நமசிவாய . மூல மந்திரத்திலோ? என்றால் ஓம் எனும் அ உ ம். இதில் எந்த மந்திரத்தில் ஈசன் வந்து இயங்குமே? என கேட்கிறார்.
இதில் ஈசன் வந்து இயங்குமே என கேட்பதிலிருந்து அது உயர்தினை இல்லை என்று புரிகிறது.
ஈசன் என்றால் ஈர்த்தல் (magnetic) சகதியை சொல்கிறாரோ?.
Tags: சிவவாக்கியம்
No Comments