சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி

சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி

216. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
சிறியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ…
விரிவதென்று வேறு செய்து வேடமிட்ட மூடரே!
அறிவினோடு பாரும் இங்கு, அங்கும் இங்கும்ஒன்றதே!

அரி என்றால் பெருமாள், அயன் என்றால் ஐயனார், (முருகன்) . சத்தம் எனும் (அதிர்வு) நாதத்தின் தன்மைகள் அனைத்தையும் 3600 ஆண்டுகளுக்கு முன் உலகுக்கு எடுத்து கொடுத்தவர் பெருமாள். அதனால் தான் அவருக்கு சங்கு சின்னம் கொடுத்து மரியாதை செய்தார்கள்.
ஒளி அதாவது வெளிச்சத்தின் (ஒளி) தன்மைகளை உலகுக்கு கொடுத்தவர் முருகன். அதாவது சூரியனின் நகர்வுகளை தரவுகளுடன் கொடுத்தவர் ஐயனார். அதனால் அவரை பிரம்மா என்றும் அழைத்தனர். அயன் என்பது ஒளி அரி என்பது ஒலி. இரண்டு சேர்ந்து ஒன்றி இருப்பதுதான் வெளி. சத்தத்தின் மலர்வால் வெளியாகி ஒளியாகி வெப்பமாகி காற்றாகி, நீராகி, நிலமாகி இப்படி ஒன்றதாக இருந்தது பலவாக மாறியது. அது இந்த உலகு தன்னில் சிறியதாகி சிவதாண்டவத்தின் ஒரு பாதம் ஊன்றி நிற்பது ஒன்றலோ? என்கிறார்.
இந்த நிகழ்வை இந்த அண்டம் விரிகிறது என இப்பொழது நம்மை அடிமைகளாக்கி ஆண்டு கொண்டு இருப்பவர்கள் விரிகிறது என்று சொல்லி வேடமிட்ட மூடர்கள் என அவர்களை இகழ்கிறார். அறிவிணோடு பாரு இங்கும் என்றால் நம் பிண்டம் , அங்கும் என்றால் நம் பால்வெளி அண்டம். (milky Way galax) அண்டமும் பிண்டமும் ஒன்று போலவே இயங்குகிறதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
நம் முன்னோர்கள் வழி வழியாக நமக்கு அறிவைக் கடத்தி இருக்கிறார்கள். அதை சிவவாக்கியர் அவர் காலத்தில் மக்களுக்கும் அரியும் வண்ணம் பாடி விளங்க வைத்து உள்ளார். நாம் மெக்கலே படிப்புத் திட்டத்தால் நம் அறிவை முற்றிலுமாக இழந்து அவர்கள் சொல்லும் infarmation களை கல்வி என நினைத்து ஏமாந்து கொண்டுள்ளோம்.
இவர்களின் விஞ்ஞானங்களை நம் முன்னோர்கள் போகிற போக்கில் எளிதாக அறிந்துள்ளார்கள் என்பதற்கு இந்த பாடல் எடுத்துக்காட்டு.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *