214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் .
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம்.
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்.
குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே!
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்றால் அப்பாவின் விதைப்பையில் விதையாக உருப்பெறுவதற்கு முன் நாதம் எனும் Information. அதாவது (Software ) அந்த உயிரின் பழைய பதிவுகள் , பின் அந்த உயிரின் வரும் பிறவியில் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற அதிர்வலைகளான தகவல் முதலிலேயே அந்த உடல் விந்துவாக உயிர் பெறுவதற்கு முன் புகுந்து விடுகிறது என்கிறார்.
பின்னர் அது வாலாக (வேலாக) கருமுட்டையில் தைப்பதற்கு முன் அந்த உடல் ஆணா அல்லது பெண்ணா என்ன காயம் என்பதை முடிவு செய்வது பெண்களுக்கு இணைதலின் போது உச்சத்தில் சுரக்கும் சுரோணிதம் தான் முடிவு செய்யும். அதாவது பெண்கள் மகிழ்ந்து சுரோணிதம் சுரந்து விந்துவுடன் கலந்து கருமுட்டையில் தரித்தால் ஆண். சுரோணிதம் சுரக்காமல் ஆணின் விந்து மட்டும் கருமுட்டையில் தரித்தால் பெண். அதைத்தான் கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம் என்கிறார்.
அருள் தரிப்பதற்கு முன் நாம் அறிவுடன் எந்த கருத்தையும் அணுகி புரிந்து கொண்டால் தான் முழு விவரம் எங்கும் கிடைக்கும். இறைவனிடமிருந்து அருள் கிடைக்க வேண்டும் என்றால் அறிவுதான் மூலாதாரம் என்று புரிந்து கொள்ளச் சொல்கிறார்.
அதையும் குருத்தறிந்து கொள்ளுங்கள் என்று அவர் காலத்தில் வாழ்ந்த குருக்களை குணம் கெடும் குருக்களே என்று இகழ்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments