213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!.
ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே.
உப்பு, காற்று, உலோகம், அலோகம், காரம் , அமிலம் எனும் ஆறு வகையான பங்கையும் கலந்து விந்துவாக அப்புறத் தளத்திலே என்றால் பெண்களின் கருமுட்டையில் தரிப்பதை குறிப்பிடுகிறார்.
ஆண் பெண் இனைதலின் போது 72,000 நாடிகளும் ஒன்றினைந்து இயங்கி, அ, உ. என சத்தம் சொல்லும் மூல நாடிகள் என்கிறார். அந்த சத்தம் இன்பம் துன்பங்களைக் கடந்து ஆணந்தமாக சொல்லு மூல நாடிகள்.
அ உ என்ற இரண்டு எழுத்துக்கும் சுழித்த எழுத்துக்கள் தான். அதில் உ என்பது உடலாக விதையாத ஆண்களிடத்திலும், அ என்ற அண்ட மலர்வாக கருமுட்டையாக பெண்களின் கருப்பையிலும் இருக்கும்.
காற்று அழுத்தமாக (pressure) வெப்பத்தால் அதிகமாகி வெடித்து விந்துவாக விதை உயிர் பெற்று வாலாக நீந்தி அப்புறத்தளத்தில் கருமுட்டையுடன் தரிப்பதைத்தான் இந்த பாட்டில் குறிப்பிடுகிறார். அங்கி என்றால் வெப்பம். இப்படி ஐம்பூதங்களின் தன்மைகளும் பயன்பாடுகளும் ஐந்து திறமாக நம் முன்னோர்கள் அறிவியலாக அப்பொழுதே அறிந்து நம்மை வழி நடத்தியிருக்கிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் அத்தாட்சிகள்.
Tags: சிவவாக்கியம்
No Comments