212. உயிர் அகத்தில் நின்றிடும், உடம்பெடுத்ததற்கு முன்.
உயிர் அகாரமாகிடும் உடல் உகாரமாகிடும்.
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பதச்சிவம்.
உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன்.
சிவ வாக்கியர் கேள்விகள் மட்டும் கேட்காமல் அதற்குண்டான பதில்களையும் கொடுக்கிறார்.
இந்த உயிர் உடம்பை எடுத்ததா? அல்லது உடம்பு உயிரை எடுத்ததா? என்ற கேள்விக்கு உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பு எடுப்பதற்கு முன் என்கிறார். இதிலிருந்து உயிர் தான் உடம்பை எடுக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது.
நம் அண்ட மலர் வைத்தான உயிர் என்கிறார். அதுதான் நம் தமிழ் எழுத்தில் உயிர் எழுத்தாக முதலில் உள்ளது.
உடல் என்பது தமிழ் எழுத்தின் ஐந்தாவது எழுத்தாகிய உகாரமாகிடும் என்கிறார். நம் தமிழ் எழுத்துக்களில் முதல் ஐந்து உயிர் எழுத்துக்கள் சிவ தத்துவத்தின் எழுத்துக்களாகும்.
அந்த உயிரையும் உடம்பையும் ஒன்று விப்பதச்சிவம். என்றால் சி – வெப்பம் , வா – என்றால் காற்று. ம் என்றால் நீர். ம் – என்றால் நாதம் என்றும் பொருள் உண்டு. இப்படி அந்த உயிரையும் உடம்பையும் வாதம் பித்தம் கபம் எனும் சிவம் தான் உயிருள்ள உடலாக ஒன்றுவிக்கிறது.
இதில் ஏதாவது ஒன்று மிகினும் குறையினும் நோய் உண்டாகி உயிரையும் உடலையும் பிரித்து விடுகிறது. இப்படி உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன் என்கிறார்.
உயிர் என்றால் பதிவுகளாக இவ் அண்ட வெளியில் இருந்து Information (Software) இந்த உலகிற்கு தந்தையின் தலையில் உள்ள ய எனும் மூன்று சுரப்பிகளின் வழியாக ற எனும் வழியாக விதைப் பையில் உயிராகப் புகுந்து பின் (விந்துவாக )சிவம் சேர்ந்து உடலாக வாலாக நீந்தி கரு முட்டையை தைத்து நிற்கிறது. இப்படி வாலறிவன் நாற்றாள் தொழார் எனின் என்ற குறளிலும் இதைத்தான் திருவள்ளுவரும் கூறுகிறார். இதைத்தான் கற்றதனால் ஆய பயன் என்றும் கூறுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments