210. அஞ்செழுத்தின் ஆதியாய் அமர்ந்து நின்றது ஏதடா?
நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதான தேதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் விரித்துரைக்க வேணுமே!
அஞ்செழுத்தின் அனாதி என்பது வெளியில் மலர்ந்த சத்தம். அதுதான் இந்தப் பால்வெளியின் ஆரம்பம். அதைத்தான் இந்தப் பாடலில் அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா? என கேட்கிறார்.
நெஞ்செழுத்து என்றால் சி எனும் வெப்பம். நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பதேதடா ?என்றால் பிறவா வரம் தா? என செபிப்பதைத்தான் கூறுகிறார்.
இந்த ஐந்து எழுத்தான நமசிவாய என்பதின் ஆழம் உணர்வுப் பூர்வமாக அறிந்து , அந்த வாளதால் அறுப்பது இந்த பிறவி கடலை நீந்தி கரையேறத்தான்.
அதற்குத் துணைபுரிவது இந்தப் பிஞ்செழுத்தான வா தான். அந்த பிராணனின் உதவியால் வாசி யோகத்தால் அடையும் அறிவுச் சுடரை , அந்த எழுத்தின் நேர்மையை விரித்து உரைக்க வேண்டும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments