209. அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!
அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு என்றால் ஐந்து புலன்கள், ஐந்து கருவிகள், இவற்றால் நாம் அனுபவம் கொள்ளும் சப்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும் ஆகிய இவற்றால் நாம் இந்த உலகை தவறாக புரிந்ததால் அல்லல் படுகிறோம் என்கிறார். இவை அனைத்தும் நம் உள்ளே அமர்ந்து நம்மை இயங்க வைக்கிறது.
இந்த ஐம்புலன்களையும், ஐந்து கருவிகளையும் சரியாக பயன் படுத்த தெரிந்திருந்தால் அவை நம்மைக் கண்டு அஞ்சும் என்கிறார். இந்த நமசிவாய என்ற ஐந்தை சரியாக உணர்ந்து உலகை சரியாக புரிந்து கொண்டால் சிவாயம் நமக்குள் அமர்ந்ததே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments