குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்….
கற்போட்ட தரவுகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் தங்களை சுற்றி உள்ள ஒரு மூன்று கிலோமீட்டர் அளவிற்கான இடத்தின் துல்லியமான வானிலைகளை நாம் கணிக்க முடியும் என்றும்…
எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான தரவுகளாக இது இருக்கும் என்றும் இது ஆங்காங்கே சரிபார்க்கப்பட்டு உண்மை என்று நிரூபிக்கப்படும் பொழுது அல்லது அறிந்து கொள்ளப்படும் பொழுது நம்மால் நம்மையும் காத்துக் கொண்டு நம்மை சார்ந்து இருக்கின்ற பலரையும் காப்பாற்ற முடியும் என்ற உண்மையை ரவி ஐயா சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்…
இதில் முக்கியமாக நண்பர்களிடம் நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களால் எல்லா நாட்களுக்கும் ஒவ்வொரு நாளைக்குமான நிமிட கணக்கான குறிப்புகளில் எடுக்க முடியாவிட்டாலும் கூட உங்களால் மாறுகின்ற வானிலையை நிச்சயமாக குறிப்பிட முடியும் அல்லது குறித்து வைத்துக் கொள்ள முடியும்….
அதாவது சாதாரணமாக இருக்கின்ற வானிலையிலிருந்து மாறுகின்ற வானிலையை இந்த கற்போட்ட நாட்களில் தரவு எடுக்கின்ற சில நாட்களில் ஆவது முடிகின்ற நேரங்களில் முடிகின்ற சமயங்களில் ஆவது நீங்கள் குறித்து வைத்து அவர்கள் குறிப்பிட்ட அந்த காலங்களில் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் ஒத்துப் போகிறதா என்பதையும் அதன் உண்மைகள் சரிதானா என்பதையும் நாம் தெரிந்து கொண்டால் எதிர்வரும் காலத்தில் மிகப் பெரும் மாறுதலை விண்ணியலில் ஏற்படுகின்ற மாறுதலை கண்டு நம்முடைய வாழ்வியலில் மாறுதலை உருவாக்கிக் கொள்கின்ற அற்புதமான வாழ்வியலை விண்ணியியலிருந்து வாழ்வியலை வடிவமைக்கின்ற வித்தையை நாம் கற்றுக் கொள்ளலாம் என்பது உண்மை…..
எனவே ஒவ்வொரு நாளும் மிகத் துல்லியமாக கற்போட்ட தரவுகளை எடுக்க முடியாவிட்டாலும் கூட இந்த குறிப்பிட்ட காலங்களில் மாறுகின்ற சில நாட்களில் சில மாற்றங்களை யாவது நீங்கள் குறித்து வைத்து அந்த கற்போட்ட தரவுகளில் குறிப்பிட்டிருக்கின்ற நிகழ்வுகளின் படி மழை பொழிகிறதா வெயில் அடிக்கிறதா என்பதை எல்லாம் ஆங்காங்கு சிறிதாவது நாம் சரி பார்க்க கற்றுக் கொள்ளலாம்…
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த கற்போட்ட காலங்களில் சில மணி நேரங்கள் ஆவது அல்லது வானத்தில் ஏற்படுகின்ற சில மாற்றங்களை யாவது அந்த நேரத்தையும் நாட்களையும் குறிப்பிட்டு பதிய வைத்துக் கொண்டு ரவி ஐயா குறிப்பிடுகின்ற எதிர்வரும் ஆறு மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த மாறுதல்கள் நடக்கிறதா என்பதை நாம் சரிபார்த்து அது சரிதான் என்று புரிந்து கொண்டால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் துல்லியமாக இதை கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவு நமக்கு வந்துவிடும். அப்போது நமக்கு பாதுகாப்பான வாழ்வியல் கிடைத்துவிடும்..
அப்போது விண்ணியலைக் கொண்டு விண்ணியலின் மாற்றங்களைக் கொண்டு…
நாம் நம்முடைய வேளாண்மையை மாத்திரம் அல்லாமல் வீடு கட்டுதல் பொருட்களை பாதுகாத்தல் காயவைத்தல் மற்றும் பூமியில் உழவு வடிவமைத்தல் தானியங்களை சேகரித்தல் பாதுகாத்தல் வீடுகளை கோடை காலத்தில் பராமரிப்பதற்கு தகுதியான காலங்களை தேர்வு செய்தல் மழைக்காலத்தைப் புரிந்து கொண்டு அந்த நாட்களில் வேலைகளை விலக்குதல் ஆகியவற்றை வானிலை ஆராய்ச்சி மையத்தை விட ஆறு மாதத்திற்கு முன்பே நாம் திட்டவட்டமாக தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கை நாம் சோதித்துப் பார்க்கும் பொழுது உண்மையாகவே நமக்கு தெரிந்துவிடும்…. அப்பொழுது நம்முடைய வாழ்க்கைமிகப் பாதுகாப்பானதாக நம்பிக்கை அளிப்பதாக மாறிவிடும்….
தன் கையே தனக்கு உதவி என்ற உண்மை தான் எழுதி குறித்து வைக்கின்ற குறிப்புகள் தன்னுடைய வாழ்க்கைக்கு எப்படி பயன்படும் எதிர்வரும் தன்னுடைய வாழ்க்கையையும் காலத்தையும் மிகச் சரியாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ளலாம்என்ற உண்மையையும் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே….
இவ்வாறு நாம் மிகத் துல்லியமாக கணிக்க பழகி விட்டால் தமிழர்களிடமிருந்து இந்த அறிவியல் உலகம் எங்கும் படர்ந்து செல்லும் உலகம் விண்ணியலை எப்படி ஆராய வேண்டும் என்று டெலஸ்கோப் இல்லாமல் நுண்ணோக்கி இல்லாமல் விண்ணியலை எப்படிக் கணிக்க வேண்டும் என்று அது பூமியில் உள்ள உயிர்களுக்கு மனிதர்களுக்கு எப்படி பயன்படும் என்று தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்…தமிழர்களின் உண்மையான அறிவியல் விண்ணியல் சார்ந்து புவியியலின் அமைப்புகளை வடிவமைப்பதில் தொடங்கி எவ்வாறு என்பதை கற்றுக் கொள்ளும்…
இந்த மகத்தான சாதனையை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தி இதற்காக ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கின்ற ரவி ஐயாவுக்கு இந்த உலகமே நிச்சயம் நன்றி சொல்லும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக அமைத்துக் கொடுத்ததற்காக….
நாமும் அவருக்கு இந்த வித்தையை கற்றுக் கொடுத்ததற்காக நிச்சயம் நன்றி சொல்வோம்….
ஆனால் அந்த உண்மைகளை நாம் சரிபார்க்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்….
சில மணி நேரங்கள் ஆவது சில வானிலை மாற்றங்களை யாவது குறித்து வையுங்கள் நண்பர்களே சரி பார்க்கப் பயன்படும்….

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *