206. அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து வல்லி யோனியாய்
மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்.
சனிப்பது ஏது? சாவது ஏது? தாபரத்தின் ஊடு போய்
நினைப்பது ஏது ?நிற்பது ஏது ? நீர் நினைந்து பாருமே!
அணுக்களால் உருண்டு திரண்டு உருவான இந்த உடலின் இந்த அற்புத படைப்பு நான்கு வகையான யோனிப் பிறப்பிலே (உப்புசம், விதை , முட்டை , குட்டி) பிறந்து அரிய படைப்புகளால் இவ்வுலகில் நம் கண் முன்னே வளைய வருகின்றன. அவைகளை ஆச்சரியத்துடன் , இறைவனின் பெரும் கருனையினால் உருவாக்கப்பட்ட இவ்வுலகம், உயிர்கள் என மயங்குவதற்கு ஏராளமாக உள்ளது.
அதை விடுத்து மனிதனின் சிற்றறிவினால் எழுதப்பட்ட நூலினைக் கண்டு மயங்குகிறீர்கள்.
இந்த உடலில் சனிப்பது எது? அந்த உடலை விட்டு இறப்பது எது? இவ்வுடலில் பரத்தில் அமர்ந்து இதையெல்லாம் நினைப்பது எது ? இந்த உடலில் உயிராக நிற்பது எது? என நம்மை நினைந்து பார்க்க சொல்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments