205. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே!
அழுக்கிருந்த தெவ்விடம்? அழுக்கிலாதது எவ்விடம்?
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே!
உடலில் புறத்தில் அழுக்குப் போக தினமும் குளித்து அகத்தில் அழுக்கு அறுக்காத மாந்தர்களே!
அழுக்கு இருந்தது எவ்விடம் ?, அழுக்கிலாதது எவ்விடம்? என அறிந்து அழுக்கு இருக்கும் அவ்விடத்தில் இருக்கும் அழுக்குகளை அறுக்க வல்லீரேல் அழுக்கில்லாத அந்த சோதி யோடு அணுகி வாழ முடியும் என்கிறார்.
நான் எனும் மனத்தில் நாம் ஐம்புலன்கள், ஐந்து கருவிகளையும் கொண்டு சப்தாதி வசனாதி அறிவைக் கொண்டு அழுக்கை அதிகரிக்காமல் அழுக்கறுக்க பழக வேண்டும்.
அப்படி மன அழுக்குகளை அறுத்தால் தான் அந்த அழுக்கில்லாத சோதி எனும் (இறைவன்) ஆழ்மனத்தோடு அனுகி வாழ முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments