203. அள்ளி நீரை இட்டதே, அங்கையில் குழைத்ததேது?
மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்ற மூடர்கள்.
கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது?
மெல்லவே குருக்களே விளம்பி பீடீர் விளம்பிடீர்!
அங்கை என்றால் உள்ளங்கை. உள்ளங்கையில் அள்ளி நீரை விட்டு குழைத்து உடல் முழுதும் பூசி , மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்றவர்களை மூடர்கள் என்கிறார். அவர்களை நடிப்பு என்கிறார்.
இந்த உடலை கள்ள வேடம் இட்டு இந்த உயிர்தான் எடுத்து இருக்கிறது, அந்த உயிர் பிரிந்த பொது உடல் இறந்து கண்ணை மூடி விட்டது. அந்த உயிரின் உண்மைகளை குருக்கள் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து விளம்பிடீர் விளம்பிடீர் என்று கேலி செய்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments