மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல் :
1. 03 Dec 2023 | மார்கழி 11 அன்று இரவு 10 மணியிலிருந்து மேகம் பார்க்க தொடங்குங்கள்.
2. காற்றின் போக்கு, காற்றின் ஈரப்பதம் புரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
3. ஒவ்வொரு பொழுதும் மாறும் போது சூழல் மாற்றம் அடையும்.
4. நிலத்தில் ஏற்படும் மாற்றத்தையும் பதிவு செய்துகொள்ளுங்கள்.
5. கர்போட்டம் பார்க்கும் முறையை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லிக்கொடுங்கள். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், பெரியவர்களுக்கும், மாணவர்களுக்கும் குறிப்பெடுக்க கற்றுக்கொடுங்கள்.
6. கர்போட்ட குறிப்புகளை நோட்டில் குறிப்பெடுங்கள். பிரிண்ட் எடுத்த காகிதத்தில் குறிப்பெடுக்கும்போது
தொலைந்து போக / சேதம் அடைய வாய்ப்புள்ளது. பெரும் உழைப்பு வீணாக போகும்.
7. வானின் உச்சியில் உள்ள வானிலையை குறிப்பிடுங்கள்.
8. ஊரில் உள்ள நண்பர்களுடன் இணைந்து செயல்படலாம். கர்போட்டம் பார்ப்பது கூட்டு செயல்பாடாக இருக்கவேண்டும்.
9. வேலைக்கு / பள்ளிக்கு / கல்லூரிக்கு செல்பவர்கள் மாலையிலிருந்து இரவு வரை கவனிக்கலாம். பெண்கள், பெரியவர்கள் பகலில் கவனிக்கலாம்.
10. அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுங்கள்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments