202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில்,
ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம்.
அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே!
ஒன்பது வாசல்கள் கொண்ட நமது உடல் அழியும் நாள என்று ஒன்று உண்டு.
ஒன்பதான ராம ராம எனும் நாமத்தை கூறுபவர்கள் வன்மமானவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த ராம எனும் நாமத்தை கூறுபவர்கள் நோய் அடைந்து ஒழிவார்கள் என 1200 வருடங்களுக்கு முன்பே உணர்ந்த சிவவாக்கியர் பாடல்களில் அதை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அன்பானவர்கள் வாக்கில் ஐந்து எழுத்துக்கள் (நமசிவாய) ஆழ்ந்து அமைந்து இருக்கும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments