201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே!
நம்முடைய அண்டம் மலர்ந்து நான்கு கரங்களாக விரிந்து பரவியது. அந்த நான்கு கரத்தில் தெற்கில் அமைந்த ஒரு கரத்தில் நம் புவனம் உள்ளது. அதில் நம் மூன்று சூரியன்கள் உள்ள குடும்பத்தில் பூமியில் நாம் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அக்கரம் அனாதியோ என கேட்கிறார். அதைத் தான் நாம் அ வாக வடித்துள்ளோம்.
அது தான் அண்ட மலர்வின் முதல் சிவதத்துவமான நாத தத்துவம். அந்த சத்தம் தான் அனைத்துக்கும் ஆதாரம். ஆனால் அதன் வேகம் மிக குறைவு நிமிடத்துக்கு
333 m/s. தான்.
அந்த கரத்தில் நம் சூரியன் உருவானதைத்தான் , சுக்கிலமாக ஆ வாக இரண்டாவது சிவதத்துவத்தை விளக்குகிறது. மூன்றாவது சிவதத்துவம் சதாசிவம். என்றால் சதா இயங்கிக் கொண்டு இருப்பது தான். அனுக்களின் உள்ளே சதா இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த இயக்கங்களை குறிப்பதுதான் இ எனும் அனுக் கோட்பாட்டை விளக்கும் வடிவம். அந்த சதாசிவம் அனாதியோ? என கேட்கிறார். நான்காவது சிவதத்துவம் ஈசாத்துவம். ஒன்றுக்கொன்று நான்கு கரத்திலும் அனைத்தும் காந்த புலன்களினால் ஈர்த்துக் கொண்டு ஈத்தர் எனும் சக்தியால் இணைந்து உள்ளதைத் தான் நாம் ஈ எனும் நான்காவது தமிழ் உயிர் எழுத்தாக நம் முன்னோர்கள் வடித்து நமக்குக் கொடுத்துள்ளார்கள். அதற்குப் பின் தான் ஆன்மாவுக்குத் தேவையான உடல் உ படைக்கப் படுகிறது.
அந்த ஆன்மா அநாதியோ? அதில் ஒழிந்து இருந்த பூதமும், புலன்களும் அநாதியோ? என்கிறார். இதையெல்லாம் நமக்கு விளக்கும், தக்க மிக்க நூல்களும் ஆனாதியோ? இதையெல்லாம் விளங்கியுள்ள யோகிகாள் விரித்துரைக்க வேண்டும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments