200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ
சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே!
நித்திரை என்றால் என்ன ?
நனவு நிலை – நாம் விழித்திருக்கும் போது இயங்கும் நிலையில் 35 கருவிகள் வேலை செய்யும்..
ஞானேந்திரியம் – 5
கர்மேந்திரியம் – 5
வசனாதி – 5
சப்தாதி – 5
தசவாயுக்கள் – 10
அந்த கரணங்கள் – 4
புருடன் – 1
கனவு நிலை – நாம் தூக்கத்தில் கனவு காணும் நிலையில்
25 கருவிகள் வேலை செய்யும். 10 கருவிகள் வேலை செய்யாது.
ஞானேந்திரியம் – 5-ம்
கர்மேந்திரியம் – 5 ம்
வேலை செய்யாது. மீதி 25-ம் வேலை செய்யும்.
நித்திரை – நம் தூக்க நிலையில் கனவற்ற நிலையில் மூன்று கருவிகள் மட்டும் வேலை செய்யும். மற்ற அனைத்தும் off – ஆக இருக்கும்.
பிராணவாயு – 1
சித்தம் – 1
புருடன் – 1
மயக்க நிலை- நம் மயக்க நிலையில் இரண்டு கருவிகள் மட்டும் வேலை செய்யும்
பிராணன் – 1
புருடன் – 1
சமாதி நிலை – சமாதி நிலையில் ஒரு கருவி மட்டும் இயங்கும்.
புருடன் – 1
பிராணனும் அடங்கி விடும்.
இப்படி மூன்று கருவிகள் மட்டும் வேலை செய்யும் நிலைதான் நித்திரை என்பது. இதை கீழாவத்தை என்பார்கள்.
நன்றாக கனவு இல்லாமல் தூங்கி எழும் போது நித்திரை என்று பெயர். அதில் ஆதரித்த மந்திரம், அமைந்த ஆகமங்கள், மாதர் மக்கள் சுற்றமும் மறந்து ஆழ்ந்து தூங்குவோம்.
அப்படி தூங்கும் போது எதுவும் தெரியாத நிலையில் இருப்போம். அப்படி நனவிலே கூட அந்த உயிர் எனும் சோதி நம் உடலிலில் எங்கு ஒழித்து வைத்துள்ளாய் சொல்லடா சுவாமியே என்கிறார். அந்த உயிரை ஒழித்து வைத்தது எது , அது எங்கும் ஆகி நின்றதோ? என கேட்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments