199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள்.
அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள்.
அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே!
ஒள எனும் எழுத்த்தில் உள்ள ள என்பது கொம்புகால் என்று அதன் வடிவம் இப்பொழுது உள்ள ள போன்று இல்லை. ஒற்றைககொம்பும் காலும் இணைந்தது.
அதே போல் ஊவிலும் உள்ள ள வும் கொம்புகால் தான். அதற்கும் அர்த்தம் உள்ளது.
ஒள எனும் எழுத்து வித்யா தத்துவத்தில் ஏழாவது மூலப் பிரகதி தத்துவமான 12 வது எழுத்து ஒள . அந்த ஒள விலிருந்து உருவானதுதான் இந்த ஐம்புலன்கள், ஞானேந்திரியங்கள், 5 தன்மாத்திரைகள். பஞ்ச பூதங்கள். ஆகவேதான் சிவவாக்கியர் அஞ்செழுத்தும், மூன்றெழுத்தும் என்றுரைத்த அன்பர்காள், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல கானும் அந்த உயிர்ப் பொருள் என்கிறார். அஞ்செழத்தும், நெஞ்செழுத்தும், நெஞ்செழுத்தான சி மற்றும், மூல பிரகிறதி ஆன ஒள எழுத்து அறிந்த பின் அந்த ஐந்து எழுத்துக்கள் அனைத்தும் ஒள- வின் வண்ணம் ஆனதே சிவாயமே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments