198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும்,
சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும்,
பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும்,
சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே!
அரு உருவமான அங்க லிங்க பீடமும், அ உ ம் எனும் ஓம் என்ற மூன்று எழுத்திலும், நம் அண்டமான (Galaxy) , நான்கு கரங்களைக் கொண்ட சங்கு சக்கர வடிவத்திலும், சகல வானகத்திலும் உள்ள பொருள் எதுவும், சிவாயம் எனும் உயிர், இறைவன், பாசம் பொருள்கள் அல்ல என்கிறார்.
இதில் எல்லாம் பங்கு கொண்ட யோகிகள் துரியம் எனும் பரம வாசல் அடையும் போது எழும் சங்கு நாத ஓசையும் அந்த உயிர் பொருளான சிவாயம் இல்லை என்கிறார்.
உயிர் பொருள் என்றால் மணம். இறை என்றால் உள்ளம். பாசம் என்றால் அகங்காரம், மாயை, புத்தி, சித்தம் எனும் உணர்ந்து அறிய கூடியவை.
Tags: சிவவாக்கியம்
No Comments