197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!
மாதா மாதம் வெளியேறும் தூமை கருத்தங்கியவுடன்
5 x 2 = 10 (மாதங்கள் ) திங்களாய் அடங்கி கருப்பையிலேயே நின்று , அந்த தூமை (கருமுட்டை) தான் கையிரண்டு காலிரண்டு , கண்ணீரண்டும் ஆகிறது . மெய் திரண்டு என்றால் இந்த உடம்பு இந்த உலகை கண்டு அனுபவிக்க கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐந்து புலன்கள் வேண்டும். இந்த ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்) நன்றாக வேலை செய்ய தேவையான ராச உறுப்புகள், முறையே கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இருதயம், நாக்கு என மெய் திரண்டு சத்தம் அனுபவிக்க, ரசம் என்றால் தண்ணீர், கந்தம் என்றால் வாசனை , இப்படி துய்ய காயம் என்றால் அப்பழுக்கற்ற உடம்பு ஆனதும் தூமை , தீட்டு என்று விளக்கப்படுகிற தூமையே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments