196. அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய்
அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியாற வின்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!
அல் என்றால் இரவு. இரவு பகல் இல்லாமல், அகம் என்றால் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் சுருக்கி என் (உள்ளம்) அகமாக்கி, அதை வெளியே பிரம்மாண்டமாக வெளியே படைத்து அதையும் காட்டி அந்த இரண்டும் இறந்து போய்.
அண்டரண்டமும் கடந்து என்றால் , நம் சூரிய குடும்பத்தையே கணக்கில் கொண்டு வர தவிக்கும் போது, புவனம், கரங்கள் என அதையும் கடந்து இந்த பால் வெளியையும் (அண்டம்)தாண்டி, அநேக பால்வெளிகளாக (பேரண்டம்) அநேக அநேக ரூபங்களாக,
அதை விவரித்து சொல்ல சொற்கள் கிடைக்காமல் இறந்து போய், மனமே அற்று உள்ளம் ஆட்கொண்டு மனமும், சொல்லும் இறந்து , அந்த சுக சொரூபம் ஆன உண்மையை சொல்லி ஆற்றுப்படுவதற்கு எனக்கு வின்னிலும், மண்ணிலும் துனைவர் இல்லை என்று சொல்கிறார்.
சொரூபம் என்றால் அருவமும், அருஉருவமும், உருவமும் அல்ல. அதை இந்த 36 தத்துவங்களையும் கடந்த நிலையில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளக்கூடியது.
அதையும் சுக சொரூபம் என்கிறார். அந்த சொரூபம் சுகமாக பேரின்பமாக இருக்கும் போல் உள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments