196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
பட்டமும் கயிறும் இனைந்து இருந்தால் தான் பறக்கும். கயிறு அறுந்து விட்டால் பட்டம் பறந்து விடும். பட்டம் என்பது சீவன் எனவும் கயிறு என்பது உடலாகவும் பொருள் கொள்கிறார்.
அந்த சீவனை (உயிரை) இந்த நம் உடல் இருக்கும் பொழுதே உணர்ந்து , பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சு போட்டா என்கிறார்.
அந்த உள்ளம் என்கிற சீவனை , திட்டவும் படாதடா என்கிறார். ஏனென்றால் அது மனம் (நான் எனும் அகங்காரம்.) என்பதில் லயிக்கும் போது மறைந்து ஒளிந்து கொள்கிறது. எது மனம் எது உள்ளம் என அறியாமல் அவ்வப்பொழுது திகைக்கிறோம். அப்படி ஒளிந்து கொள்பவனை திட்டாதடா என்கிறார். திட்டினால் மீண்டும் உள்ளத்தை கண்டு கொள்ள நாட்கள் பிடிக்கும். திட்டி சீவனை விட்டு விடாதே என்கிறார். களவறிந்த கள்வனை என்றால் நம் சீவன் அறிவுப் பொருள். தானாக நல்லவற்றை அறிந்து கெட்டவற்றைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றது. ஆனால் மாய்கையால் பாசத்தைப் (மனம்) பற்றிக் கொண்டு இறைவனின் (உள்ளம்) பாதையை தவற விடுகிறது. அதனால் அதை எதிர் கொள்ளும் போது நாம் தான் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் நாம் தடுமாறும் போது பக்கத்திலேயே இருந்தாலும் கண்டு கொள்ளாமல் களவுற்ற கள்வனைப் போல் இருப்பான். உள்ளே உள்ள மனம் தான் உள்ளம். அதை எதிர்ப்படும் போது கட்டடா என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments