195. பொய்க்குடத்தில் திளைத் தொதுங்கி போகம் வீசுமாறு போல் ,
இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே.
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்,
இச்சடம் சிவத்தை மொண்டு அகம் அமர்ந்து இருப்பதே!!
முக்குணத்தால் உருவான ஞான இந்திரியங்கள் 6-ம் கர்மேந்திரியங்கள் 5 , தன் மாத்திரைகள் – 5-ம் ஐம்பூதங்கள் – 5-ம் கொண்டு இந்த நம் உடல் தன, கரண, புவன , போகம் அனுபவிக்கிறது. என்பதை கூறுகிறார்.
இந்த சடமும் (உடலும்) இந்திரியங்களும் நீரு போல அலைகிறது என்கிறார்.
சாதாரண குடம் நீர் நிறைத்து வைத்தால் ஆடாமல் அசையாமல் நிற்கும்.
அது போல இந்த உடலிலும் சிவத்தை மொண்டு (நிறைத்து) அகத்தில் அமர்ந்து விட்டால் இனி பிறவா நிலை ஏற்படும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments