நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி மாற்றி மழையின் சூட்சுமத்தை புரிந்து கொண்டோம் .
மார்கழி 12ம் தேதியே கர்ப்போட்டம் ஆரம்பித்து விடுகிறது. அதாவது December 3-ம் தேதி இரவே கர்ப்போட்ட கணக்குகள் சரியாக ஆரம்பித்து விடுகிறது. 108 நிமிடக் கணக்குகள் சரியாக தேதிகளில் பொருந்தியது.
எனவே வரும் மார்கழி 12 – ல் (December – 3 – இரவு 10 pm. -மணியிலிருந்து கர்ப்போட்ட தரவுகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
அதை அடுத்த 6 மாதம் கழித்து ஆடி – 18 – லிருந்து மழைப் பொழிவுகளுடன் பொருத்தி நீங்களே சரிபார்க்கலாம்.
எங்கள் பகுதியில் 2022 – மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகள் 2023 ஆடி – 18 – லிருந்து தினமும் சரி பார்த்த போது இதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
எங்கள் பகுதியில் இந்த 2023 ஆடியிலிருந்து ஆவணி புரட்டாசி வரை மழைப் பொழிவே இல்லை. அதை கர்ப்போட்ட தரவுகளில் அறிந்து இந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த 10 விவசாயிகளிடம் பகிர்ந்து ஆடியில் பயிர் செய்யாமல் தவிர்த்தோம். நட்டம் அடையாமல் வேறு வேலைகளைப் பார்த்தோம். ஐப்பசி. கார்த்திகையில் மழை பொழிவின் கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் அறிந்து , கடலை, சோளம் விதைத்துள்ளோம். மழை கிடைத்தது. வரும் சித்தரியல் நாட்காட்டிப் படி கார்த்திகை கடைசி வாரத்திலும், மார்கழி முதல் வாரத்திலும் மழை உண்டு. பயிர்கள் தப்பி விடும். இப்படி பயிர் செய்வதற்கு தகுந்த கர்ப்போட்ட தரவுகள் விவசாயிகள் எடுத்துப் பயன் படுத்தி நட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வரும் சித்தரியல் நாட்காட்டிப் படி மார்கழி – 12 விருந்து அதாவது Dec-3-ம் தேதி மாலையிலிருந்து தொடர்ந்து 24 – மணி நேரமும் துள்ளியமாக கர்ப்போட்டம் கவனிக்கத் தயாராவோம். ஒவ்வொரு 108 – நிமிடங்களும் ஒரு நாளைக்கு எனும் வீதம் 12 நாட்களுக்கு கர்ப்போட்ட தரவுகள் இடைவிடாமல் எடுப்போம் பயன் பெருவோம்.

போன ஆடியில் வெளியிட்ட காணொளி. ஆனால் இந்த வருடம் கவனித்ததில் சிறிய மாற்றம் 108 நிமிடம் ஒரு நாள் என்பதில் இதுவரை சரியாக பொருந்துகிறது.
ஆங்காங்கே அவரவர் ஊர்களில் கவனித்தால் தான் பொதுவான புரிதல் வரும். இந்த புரிதல் சரியாக அனைவருக்கும் பொருத்தினால் சாதகங்.களையும். சரிப்படுத்த முடியும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *