193. உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது.
இருக்கிலென் மறக்கிலென் நினந்திருந்த போதெலாம்.
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ.
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது என்றால் , உயிரால் இந்த உடல் எடுத்து பின் தான் உன்னை அறிய முடிந்தது. உயிராக மட்டும் இருந்து உன்னை அறிய முடியவில்லை என்கிறார். உடல் தான் இறைவனை அறியும் கருவி என்கிறார். உயிர் தான் உடலைக் கொண்டு இறைவனை அறிகிறது. உன்னை அறிந்த பிறகு மறக்கிலென் , உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லாவற்றிலும் வியாபித்து நீ பரவி இருப்பது புரிகிறது. உருக்கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று என்பதும் புரிகிறது. இதுவெல்லாம் திருக்கலந்ததிலிருந்துதான் என்பதும் புரிகிறது. திரு என்றால் இறைவன் . அவன் இருப்பதை அறியாமல் மாயையில் , ஆணவத்தில். கன்மத்தில் மனம் அலைந்த போது திரு இருப்பது அறியாமல் இருந்தது. ஆனால் நான் ஓர் அடி இறைவனை அறிய எடுத்து வைத்ததும், அவனுடைய அருளால் திரு என்னுள் கலந்து இருப்பதை அறிந்து கொண்டு தெளிந்ததே சிவாயமே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments